ஐபிஎல் ஜுரம் ஆரம்பம்:ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ அறிமுகம்

Vento
டெல்லி: அடுத்த மாதம் துவங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவையொட்டி, ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ காரை வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையுடன் அடுத்த மாதம் 8 ந்தேதி நான்காவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா துவங்க உள்ளது. இதையொட்டி, ஐபிஎல் எடிசன் வென்ட்டோ காரை போக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கண்ணை கவரும் வண்ணம் கொண்ட லெதர் இருக்கைகள், நேவிகேஷனுடன் கூடிய டச் ஸ்கீரின் மல்டி மீடியா பிளேயர் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் ஐபிஎல் எடிசன் வென்ட்டோ வருகிறது.

ஐபிஎல் லோகோவுடன் கூடிய ஸ்டீல் பிரேம், ஐபிஎல் லோகோவுடன் கூடிய புளோர் மேட் ஆகியவை ஐபிஎல் எடிசன் கார் என்பதை நிருபிக்கிறது. இருக்கைகளிலும் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் உருவம் கொண்ட எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறுகையில்,""கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட வென்ட்டோ இந்தியர்களின் மனம் கவர்ந்த காராக மாறியுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய அம்சங்களுடன் கார்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும்," என்று கூறினார்.

ரூ.7.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள ஐபிஎல் எடிசன் வென்ட்டோ கார்கள் வரும் ஏப்ரல் முதல் வாரம் முதல் டீலர்களில் கிடைக்கும் என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.மேலும், இந்த காருடன் கிரிக்கெட் கிட்டும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2011, 18:10 [IST]
English summary
Volkswagen has announced a new version of their Vento sedan. The new version, dedicated to the crazy cricketing fans of this country, is christened the Vento IPL edition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+