ஆகஸ்ட் 17ல் புதிய ஜெட்டா அறிமுகம்: வோக்ஸ்வேகன்

இந்த நிலையில், தனது ஜெட்டா செடான் காரையும் அதே தேதியில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. அதேவேளை, ஜெட்டாவின் புதிய டீசல் மாடலை மட்டும் வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த திட்டமி்ட்டு இருப்பதாக தெரிகிறது.
பெட்ரோல் விலை உயர்வால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையை கருதி, ஜெட்டாவின் புதிய டீசல் மாடலை வோக்ஸ்வேகன் களமிறக்க உள்ளது. டி-செக்மென்ட ரகத்தை சேர்ந்த ஜெட்டா வோக்ஸ்வேகனின் பிரத்யேக வெளிப்புற வடிவமைப்பையும், அனைத்து ஸ்டான்டர்டு தொழில்நுட்பத்துடன் வருகிறது.
இதில், 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடனும் வருகிறது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் புளூமோஷன் தொழில்நுட்ப அம்சமும் உண்டு.
செவர்லே குரூஸ், ஹோண்டா சிவிக், டொயோட்டோ கரொல்லா ஆகிய கார்களுக்கு இந்த கார் கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், மாருதி ஸ்விப்ட் அறிமுகப்படுத்தும் தினத்தன்று ஜெட்டாவை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருப்பதற்கான காரணம் குறித்து ஆட்டோ வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கிறது.


Click it and Unblock the Notifications








