மேம்படுத்துப்பட்ட வடிவமைப்பில் பீட்டில்:வோக்ஸ்வேகன் அறிமுகம்

Volkswagen Beetle
நீண்ட நெடுங்காலமாக உலக முழுவதும் கார் சந்தையில் தனது பாரம்பரிய வடிவமைப்பையும், தனித்தன்மையும் இழக்காமல் மவுசுடன் வலம் வரும் கார் ஒன்று உண்டு என்றால் கண்ணை மூடிக்கொண்டு பீட்டிலை கூறிவிடலாம்.

புதிய தொழில்நுட்பம், மக்களின் ரசனைக்கு தக்கவாறு நாளுக்கு நாள் கார் வடிவமைப்பு மாறிக்கொண்டே வரும் சூழ்நிலையில், தனது பழமை மாறாத வடிவமைப்புடன் வெளிவரும் பீட்டிலுக்கு உலகம் முழுவதும் இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த 1938ம் ஆண்டு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்ட பீட்டிலுக்கு இன்னமும் மவுசு குறையாமல் இருப்பதை கண்டு ஆட்டோமொபைல் துறையினரே வியப்பு தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு, அவ்வப்போது பீட்டிலில் புதிய அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்து வருகிறது வோக்ஸ்வேகன்.

இந்த வரிசையில், மூன்றாம் தலைமுறை பீட்டில் காரை அறிமுகப்படுத்தியுள்ளது வோக்ஸ்வேகன். பார்த்தாலே பரவசப்படுத்தும் அதே வடிவமைப்பில் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியாக மாற்றங்களை செய்துள்ளது வோக்ஸ்வேகன்.

முன்பக்கம் கண்ணை கவரும் கீழ்பக்க கிரில், ரன்னிங் விளக்குகள்(எல்இடி), பின்பக்கம் வைன்டு சீல்டு, கண்ணாடி கூரை என அனைத்து இடங்களிலும் வோக்ஸ்வேகனின் கைப்பக்குவம் பளிச்சிடுகிறது.

சாவி இல்லாமல் கதவை திறக்கும் அதிநவீன கீ லெஸ் என்ட்ரி தொழில்நுட்பம், புதிய நேவிகேஷன் சிஸ்டம், மனதை மயக்கும் வண்ணங்களில் லெதர் இருக்கைகள், ஸ்டாப்ஸ்டார்ட் தொழில்நுட்பம் ஆகியவையும் பீட்டிலின் மதிப்பை உயர்த்துகிறது.

மேலும், எரிபொருள் சிக்கனத்தை தரும் வோக்ஸ்வேகனின் புளுமோஷன் தொழில்நுட்ப வசதிகளும் பீட்டிலில் உள்ளது. 105பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் 1.2லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின், 160 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின், 200 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் புதிய பீட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பீட்டில் அடுத்த ஆண்டு ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போதுள்ள பீட்டில் கார் போன்றே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2011, 12:45 [IST]
English summary
Finally entered into its third generation, with Volkswagen launching the latest version of the Beetle with Bluemotion technologies.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+