மும்பை சினிமா ஸ்டூடியோவில் புதிய ஜெட்டா அறிமுகம்

Volkswagen Jetta
மும்பை: பிரபல சினிமா ஸ்டூடியோவில் புதிய ஜெட்டா பிரிமியம் செடான் காரை வோக்ஸ்வேகன் நேற்று அறிமுகம் செய்தது.

இந்தியாவின் பிரிமியம் செடான் கார் மார்க்கெட்டில் போட்டி அதிகமாகி வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் பிரிமியம் செடான் கார்களை களமிறக்கி வருகின்றன.

இந்த வரிசையில் வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஜெட்டா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை நேற்று அறிமுகம் செய்தது.பாலிவுட் நட்சத்திரங்களை கவரும் வகையில், மும்பையில் உள்ள பிரபல மெகபூப் சினிமா ஸ்டூடியோவில் புதிய ஜெட்டா அறிமுகம் விழா நேற்று நடந்தது.

மேல்தட்டு மக்களை வெகுவாக கவரும் புளுமோஷன் தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஜெட்டா வந்துள்ளது. லெதர் இருக்கைகள், லெதர் பேக்கஜ் பவர் ஸ்டீயரிங், ஆடி கார்களில் இருப்பது போன்று பகல் வேளைக்கு தக்க ரன்னிங் லைட்ஸ், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட இருக்கைகள், ஸ்டீரியோ சிஸ்டம் என ஏராளமான ஸ்டான்டர்டு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய ஜெட்டாவின் 2.0 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சின் 4,200ஆர்பிஎம் வேகத்தில் 140 ஹார்ஸ்பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இது கியர் மாற்றும் அனுபவத்தில் புதிய சுகத்தை கொடுக்கிறது.

இதில், குரூஸ் கன்ட்ரோல், 8 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், விபத்துக்களில் சிக்கினால் கூட அதிக காயம் ஏற்படுவதை தவிர்க்கும். எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பாதுகாப்பு அம்சத்தையும் இது கொண்டுள்ளது. இந்த கார் 6 வண்ணங்களில் கிடைக்கும் என வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ரூ.14.12 லட்சம் விலையிலிருந்து புதிய ஜெட்டா மாடல்கள் கிடைக்கும் என வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 18, 2011, 11:51 [IST]
English summary
The arrival of the new Volkswagen Jetta is more than welcome in its class of worthy competitors, and starting at a price of 14.12 lakhs (ex-showroom Delhi) , the new version of this prestigious sedan will be available in three variants.These include leather seat upholstery, a leather package for the steering wheel, handbrake and gear lever etc. Day time running lights, Cruise control, Hill Start Assist, an electrically adjustable driver seats, all comes as standard with this new version of the Volkswagen Jetta. The all New Jetta is equipped with 2.0Litre, 4 cylinder CRDi engine with a maximum power output of 140PS 4200rpm. Mated to a 6 speed DSG gearbox and a Manual version, the new Jetta will have smoother gearshift and better responsiveness as compared to the older model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+