அடுத்த ஆண்டு சிறிய காரை அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டம்

Volkswagen Small Car
டெல்லி: அடுத்த ஆண்டு குறைந்த விலை கொண்ட சிறிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ, வென்ட்டோ, பஸாத் உள்ளிட்ட பல மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. வோக்ஸ்வேகனின் பில்டு குவாலி்ட்டி வாடிக்கையாளர் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்றுள்ளது.

இதனால், விலையில் சற்று கூடுதலாக இருந்தாலும் வோக்ஸ்வேகனின் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்திய சந்தையில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போலோ ஹேட்ச்பேக் கார் வோக்ஸ்வேகனின் ஆரம்ப மாடலாக உள்ளது. இது பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. இந்நிலையில், இதைவிட குறைந்த விலை கொண்ட சிறிய காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

வோக்ஸ்வேகனின் போலோ ரூ.5.31 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதிய மாடல் இதைவிட விலையில் ஒரு லட்ச ரூபாய் வரை குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய கார் மூலம், இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவும் வோக்ஸேவேகன் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சிறிய கார் அறிமுகப்படுத்தப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2011, 11:54 [IST]
English summary
Germany car giant Volkswagen plans to launch small car also cheapest in India by next year. This small car is expected to be priced Rs. 1 lakh below the base price of the Polo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+