இந்தியாவில் 'சீட்' மூலம் சிம்மாசனம் ஏறத் துடிக்கும் வோக்ஸ்வேகன்

சீட் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

ஐரோப்பிய ஸ்டைல் கார்களை வடிவமைப்பதில் ஸ்பெயினை சேர்ந்த சீட் கார் நிறுவனம் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் சந்தையில் தனது மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொள்ளும் வகையில், சீட் நிறுவனத்தின் கார் மாடல்களை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இளைஞர்களை வசீகரிக்கும் அழகு கொண்ட சீட் கார்கள் நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என்று வோக்ஸ்வேகன் கருதுகிறது.

வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் ரகத்தை சேர்ந்த சீட் பிராண்டின் இபிஸா ஹேட்ச்பேக் கார், வோக்ஸ்வேகன் ஜெட்டா மற்றும் பஸாத்துக்கு இடைப்பட்ட ரகத்தை சேர்ந்த எக்ஸியோ சலூன் கார்களை அறிமுகம் செய்கிறது.

இதேபோன்று, டொயோட்டோ இன்னோவா மற்றும் டாடா ஆரியா ரகத்தை சேர்ந்த அலம்பரா எம்பிவி கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த புத்தம் புதிய கார் மாடல்கள் மூலம் இந்தியாவில் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்த வோக்ஸ்வேகன் கணக்கு போட்டுள்ளது.

மேலும், தனது துணை நிறுவனங்களான ஆடி, ஸ்கோடா மற்றும் சீட் கார்களின் விற்பனையை அதிகரிக்கவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளவும் வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 17, 2011, 12:13 [IST]
English summary
German car maker Volksawagen planning to launch Seat brand to India to further increase of its market share. Volkswagen may bring the Seat model line-up the Ibiza hatchback, Exeo saloon and Alhambra MPV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+