புதிய கான்செப்ட் மாடல் பீட்டில் கார்: வோக்ஸ்வேகன் அறிமுகம்

ஆல்வீல் டிரைவ் கோல்ப் ஆர் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சினுடன் புதிய பீட்டில் ஆர் காரை வோக்ஸ்வேகன் வடிவமைத்துள்ளது. சாது மிரண்டால் காடு கொள்ளாது கான்செப்ட் கொண்ட இந்த கார் பார்ப்பதற்கு பரம சாதுவாகவும், பிக்கப்பில் பீறிட்டு எழும் என்றும் வோக்ஸ்வேகன் தரப்பு தெரிவிக்கிறது.
முன்பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்கள் ஸ்போர்ட்டி லுக்குடன் மாற்றம் கண்டுள்ளது. உள்பக்கமும் மாற்றங்களை சந்தித்துள்ளன. இருக்கைகள் ஆர் எழத்து பேட்ஜுடன் உயர்ரக லெதரால் இழைக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் பெரும்பாலான பகுதிகளை கறுப்பு வண்ணம் ஆக்கிரமித்துள்ளது.
கியர் ஷிப்ட், சென்ட்ரல் கன்சோல் என அனேக இடங்களில் வோக்ஸ்வேகனின் கைப்பக்குவம் பளிச்சிடுகிறது. கோல்ப் ஆர் காரை கோல்ப் ஜிடிஐ ஆக மாற்றியது போன்றே பீட்டிலையும், பீட்டில் ஆர் காராக மாற்ற வோக்ஸ்வேகன் முயற்சிப்பதாக ப்ராங்க்பர்ட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








