இந்தியாவுக்கு பட்ஜெட் விலை கார்கள்: வால்வோ திட்டம்

சொகுசு பஸ்களுக்கு பெயர்போன வால்வோ நிறுவனம் பிரிமியம் சொகுசு கார்களை தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பல்வேறு மாடல்களில் பிரிமியம் ரக எஸ்யூவீ மற்றும் செடான் கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இருப்பினும், பஸ் மார்க்கெட்டில் கோலோய்ச்சும் அளவுக்கு கார் மார்க்கெட்டில் அந்த நிறுவனத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை.
மேலும், இந்திய பிரிமியம் கார் மார்கெட்டில் முன்னிலை வகிக்கும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலேயே கார் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்கின்றன.
ஆனால், வால்வோ அனைத்து கார்களையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், விலை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா மார்க்கெட்டின் தேவைக்கு தகுந்தாற்போல், பட்ஜெட் விலையில் கார்களை தயாரிக்கஅந்த நிறுவனம் திட்டமி்ட்டுள்ளது.
வால்வோ இந்தியா புதிய நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் கூறுகையில்," வால்வோ கார்களில் ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும் ஆக்சசெரீஸ்களை நீக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், கார்களின் விலையை வெகுவாக குறைக்க முடியும். எதிர்காலத்தில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில்க்கொண்டு கார்களை அறிமுகம் செய்வோம்," என்று கூறினார்.
வால்வோ நிறுவனம் இந்தியாவில் எஸ்-60, எஸ்-80 பிரிமியம் செடான் கார்களையும், எக்ஸ்சி-60, எக்ஸ்சி-90 பிரிமியம் எஸ்யூவீ கார்களையும் விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








