சாதாரண ரக பஸ் தயாரிப்பில் கால் பதிக்கும் வால்வோ

வால்வோ என்ற பெயரை கேட்டவுடன் அதன் அற்புத வடிவமைப்பு கொண்ட சொகுசு பஸ்களே நம் கண் முன் நிழலாடும்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்கள் தற்போது மாநகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில், புறநகர் சேவைகளுக்கு பயன்படும் விதத்தில் சாதாரண ரக பஸ்கள் தயாரிப்பிலும் களமிறங்குகிறது வால்வோ.
இதுகுறித்து வால்வோ தலைமை செயல் அதிகாரி ஆகாஷ் பாஸி கூறியதாவது:
"தற்போது ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி விலை கொண்ட டாப் வேரியண்ட் சொகுசு பஸ்களை மட்டுமே தயாரித்து வருகிறோம்.
ஆனால், விரைவில் குறைந்த விலை கொண்ட சாதாரண பஸ்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த பஸ்கள் சிறிய நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
புதிய பஸ் தயாரிப்புக்காக பெங்களூரில் உள்ள ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறோம்.
இதற்காக, ரூ.200 கோடி முதலீடு வரை முதலீடு செய்கிறோம்," என்று கூறினார்.
தரம், சொகுசு என மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்றுள்ள வால்வோ நிறுவனம் தயாரிக்கப்போகும், புதிய ரக பஸ்களும் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெறும் என்பது திண்ணம்.


Click it and Unblock the Notifications








