பஸ் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த ரூ.400 கோடி முதலீடு செய்யும் வால்வோ

Volvo Bus
அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தும் வகையில் பெங்களூர் ஆலையை ரூ.400 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது வால்வோ.

ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு பஸ் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது. இந்தியாவில் வால்வோ பஸ்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது. மேலும், பெரு நகரங்களுக்கிடையிலான போக்குவரத்தில் வால்வோ முக்கிய பங்கு வகிக்கிறது.

பெங்களூரில் உள்ள ஆலையில் பஸ்களை உற்பத்தி செய்யும் அந்த நிறுவனம், கோச் தயாரிப்பில் பிரபலமான ஆஸாத் பஸ் பாடி பில்டிங் நிறுவனத்தின் கூட்டணியில் பஸ்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வால்வோ திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடியை முதலீடு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், தற்போது 1,000 என்ற அளவில் இருக்கும் பஸ் விற்பனையை வரும் 2015ம் ஆண்டிலிருந்து 5,000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 560 பஸ்களை விற்பனை செய்த அந்த நிறுவனம் ரூ.560 கோடியை வருவாயாக ஈட்டியது.

வரும், 2015ம் ஆண்டிலிருந்து விற்பனை 5,000 பஸ்களாக உயரும்போது ரூ.4,900 கோடியை வருவாயாக ஈட்ட அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இந்த தகவ்ல்களை பெங்களூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வால்வோ பஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி ஹகன் கரிஸ்ஸன் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 15, 2011, 11:26 [IST]
English summary
Luxury bus maker Volvo has decided to invest Rs.400 crore in India. This amount utilised for expansion and product development, volvo higher official said in statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+