சந்தை போட்டி: புதிய ஐ20 காரை அறிமுகம் செய்யும் ஹூண்டாய்

Hyundai i20
சந்தை போட்டி காரணமாக கூடுதல் அம்சங்களுடன் புதிய ஐ20 காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஸ்விப்ட்டுக்கு நேரடி போட்டியாளராக கருதப்படும் ஐ20 கார் பல புதிய மாடல்களின் வரவால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

தவிர, ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காரின் விலை திடீரென ரூ.1.75 லட்சம் வரை குறைத்ததும், ஃபிகோ, போலோ கார்களின் தொந்தரவும் விற்பனையில் ஐ20 காருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளது.

சந்தை போட்டியை சமாளிக்க கூடுதல் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சிற்சில மாற்றங்களுடன் புதிய ஐ20 காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ் மாடல்களிலேயே டில்ட் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் கூல்டு கிளவ் பாக்ஸ் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்களுடன் புதிய ஐ20 வர இருக்கிறது.

மேலும், வெளிப்புறம் சில மாற்றங்களுடன் புதிய ஏரோடைனமிக் வடிவமைப்பை பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், தனது வாடிக்கையாளர்களை கண்டிப்பாக தக்கவைக்க முடியும் என்று ஹூண்டாய் கருதுகிறது. இதுதவிர, புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளோம்.

அந்த எஸ்யூவி 5 இருக்கை வசதிகொண்ட டுஸ்கானாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். டுஸ்கான் எஸ்யூவி முதலில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கவும், பின்னர் இந்தியாவிலேயே இந்த எஸ்யூவியை விற்பனை செய்யவும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய எஸ்யூவி 2 லிட்டர் எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சினுடன் வர இருக்கிறது. புதிய எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Monday, December 26, 2011, 15:59 [IST]
English summary
The i20 has been Hyundai's most successful sub compact hatchback and is considered to be a competent competitor of the Maruti Suzuki Swift. It has been facing increased competition after the arrival of the Jazz, Figo and the Polo. Hyundai has now decided to add the Fluidic design concept to the i20 too. This facelift is expected to make the i20 look better with improved aerodynamics.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+