டாடா நானோ கார் மறு வடிவமைப்பு செய்யப்படுமா?

Tata Nano
நானோ காரை மறு வடிவமைப்பு செய்வது குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்காக தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்துக்கு(என்ஐடி)டாடா மோட்டார்ஸ் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிக்குறைந்த விலை காரான நானோவை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் டாடா மோட்டார்ஸ் களமிறக்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் நானோ விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இந்த நிலையில், நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் மேம்படுத்தப்பட்ட நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

இருப்பினும், நானோ பொதுவான வடிவமைப்பில் எந்த மாறுதல்களும் இல்லை. இந்த நிலையில், நானோவை மறு வடிவமைப்பு செய்வது குறித்து தங்கள் மாணவர்கள் ஆய்வு நடத்தி ஆலோசனைகள் தருவதற்காக அனுமதி தர வேண்டும் என தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அணுகியது.

இதற்கு டாடா மோட்டார்ஸ் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டாடா மோட்டார்ஸ் மற்றும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் ஆகிய இருதரப்பும் பலன் பெறுவர்.

கார் வடிவமைப்பு குறி்த்து மாணவர்கள் கற்றுக்கொள்வதோடு, நானோ காரை வடிவமைப்பது குறித்து மதிப்புமிக்க ஆலோசனைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் வழங்கும் வடிவமைப்பு ஆலோசனைகள் திருப்திகரமாக இருந்தால் நானோ காரை டாடா மோட்டார்ஸ் மறுவடிவமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Tuesday, November 29, 2011, 11:15 [IST]
English summary
The Tata Nano got a facelift in November in the form of the 2012 Nano. However the redesign has not been able to make a significant impact as the basic design has remained the same. Further, The Nano does not have the same craze around it when compared to 2009 when it was launched. A completely new Nano can make a greater sales impact than the current version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+