பெண்களின் மனம் கவர்ந்த காராக மாறிய டாடா நானோ

Favourite Tata Nano
பெண்களின் மனம் கவர்ந்த காராக நானோ கார் திகழ்வதாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, கார் வாங்கும்போது எளிதாக டிரைவ் செய்யும் வகையிலும், பார்க்கிங் செய்வதற்கு ஏற்ற சிறிய காராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் இருக்கிறது. மேலும், போக்குவரத்து நெரிசலில் சமாளித்து செல்லும் வகையிலும் அந்த கார் இருக்க வேண்டும் நினைக்கின்றனர்.

இந்த எதிர்பார்ப்புகளை நானோ கார் எளிதாக பூர்த்தி செய்வதாக நானோ வைத்திருக்கும் பெண் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, மேற்கொண்ட டாடா மேற்கொண்ட ஆய்வில், நாட்டில் நானோ கார் வாங்கிய வாடிக்கையாளர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெங்களூரில் மட்டும் நானோ கார் வாங்கிய வாடிக்கையாளர்களில் 20 சதவீதம் பேர் பெண்கள்.

அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் பெண்களின் மனம் கவர்ந்த காராக நானோ மாறியுள்ளது. மேலும், பட்ஜெட் காராக இருப்பதாலும் நானோவை பெண்கள் விரும்புவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மேலும், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் காருக்கு மாற நினைக்கும்போது, அவர்களின் மனதில் முதலிடம் பிடிப்பது நானோதான். அதிக மைலேஜ், எளிதான கையாளுமை கொண்ட காராக இருப்பதால் பல பெண்கள் டூவீலரிலிருந்து நானோவுக்கு மாறியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து மிகுந்த மாநகரங்களில் எளிதாக டிரைவ் செய்து செல்லவும், பார்க்கிங் செய்வது எளிது போன்ற காரணங்களும் பெண்கள் நானோவை தேர்வு செய்வதற்கு காரணம். மேலும், டூவீலரில் செல்லும்போது பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

ஆனால், காரில் செல்லும்போது அவர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதாக உணர்கின்றனர். இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் நானோ கார் பற்றி கூறும்போது," சாப்ட்வேர் துறையில் பணியாற்றுவதால் சில சமயங்களில் இரவில் வீடு திரும்பும் நிலை இருக்கும்.

இதனால், பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. ஆனால், நானோ வந்தபின் அந்த கவலை இல்லை. முன்பு, டூவீலரில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது மழை வந்தால் டென்ஷனாகிவிடும். வீட்டில் உள்ளவர்களுக்கும் டென்ஷன். ஆனால், அந்த பிரச்னையும் இப்போது இல்லை.

மேலும், இரண்டு மூன்று முறை பெங்களூரிலிருந்து சென்னை சென்று வந்தேன். எந்த பிரச்னையும் இல்லாமல் மற்ற கார்கள் போல் நானோவும் அனாயசமாக நெடுஞ்சாலையில் சென்றது," என்கிறார்.

குறைந்த டவுண்பேமண்ட், 60 மாதங்கள் வரை தவணைக்காலம், டாடாவின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவையும் பெண்களை நானோ பக்கம் இழுத்து செல்கிறது என்று ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 22, 2011, 11:10 [IST]
English summary
Cars are something that create an emotional response among men. If we compare how men and women understand cars, it is very clear that men like cars as much as women like jewellery. But here is a study that is showing a slight reversal in these trends. According to a recent study by tata motors, the Nano has emerged as a car that is highly preferred by women.The study has revealed that 10 per cent of Nano buyers in India are women. While the percentage of women among car buyers in India is just two per cent. This is some good news for Tata Motors. Women usually prefer cars that are easy to drive, easy to park and are nimble in traffic. The Tata Nano fits al these requirements perfectly and has evidently impressed women
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+