ஜப்பானில் சூப்பர் கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து: ரூ.20 கோடிக்கு சேதம்

world's most expensive car crash in Japan
ஜப்பானில், எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நிகழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் ரூ.20 கோடி மதிப்புடைய கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரில் பிரபலமான ஆட்டோ கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் சிலர் தங்களது ஸ்போர்ட்ஸ் கார்களில் ஹிரோஷிமா நகருக்கு சென்றனர்.

எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகத்தில் அந்த கார்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த ஃபெராரி காரின் டிரைவர் ஒருவர் திடீரென சாலையின் அடுத்த டிராக்கில் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த கார் நிலை தடுமாறி சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதைத்தொடர்ந்து, பின்னால் அதிவேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து ஒன்றுடன் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 8 ஃபெராரி கார்கள், 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மற்றும் லம்போர்கினி, டொயோட்டோ பிரையஸ் உள்ளிட்ட பல கார்கள் ஒன்றுடன் மோதி பலத்த சேதமடைந்தன.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஏராளமான ஸ்போர்ட்ஸ் கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ரூ.20 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உலகிலேயே அதிக சேதம் ஏற்பட்ட கார் விபத்தாக இது கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 6, 2011, 17:50 [IST]
English summary
In what could e called the world's most expensive car crash, more than ten cars were severely damaged after they crashed in to each other on a Japanese freeway. Eight Ferraris, two Mercedes-Benz and a Lamborghini were the notable super cars involved in the crash. Among the regualr cars in the crash was the toyota Prius hybrid car. The total worth of the cars that crashed in Japan is estimated at $4 millon or Rs.20 crores.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+