எம்ஆர்எப் புதிய சிங்கிள் சீட்டர் ரேஸ் கார்:சென்னையில் அறிமுகம்

வரும் அக்டோபர் 26 முதல் 28ந் தேதி வரை 2-வது இண்டியன் கிரான்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் பந்தயங்கள் நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக புதிய காரை எம்ஆர்எப் தயாரித்துள்ளது.
டல்லாராவின் கார்பன் பைஃபைர் சேஸி கொண்ட இந்த புதிய காரில் ரினால்ட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 210 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்டது.
டல்லாராவிடமிருந்து உரிமம் பெற்று இந்த காரை கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அசெம்பிள் செய்துள்ளது.
இந்த புதிய காரை கடந்த வெள்ளியன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடந்த விழாவில் நரேன் கார்த்திகேயன் அறிமுகம் செய்தார். மேலும், இந்த புதிய காரை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தை சுற்றி வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
இந்தியாவின் அதிவேக கார் இதுவாகத்தான் இருக்குமென எம்ஆர்எப் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








