பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் புதிய 2013 செவர்லே பீட்
அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டுக்கு வர இருக்கும் புதிய செவர்லே பீட் காரை பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

செவர்லே பிராண்டின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வரும் மாடல் பீட். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸ்பார்க் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிக்கென்ற தனது வடிவமைப்பால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட பீட் கார் தற்போது கடும் சந்தை போட்டியால் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட பீட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது.
வருகிற 29ந் தேதி முதல் அடுத்த மாதம் 14ந் தேதி வரை நடைபெற இருக்கும் பாரீஸ் மோட்டார்ஸ் ஷோவில் புதிய பீட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய பீட் கார் அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் கலக்க வரும் புதிய பீட் காரின் முன்பக்க கிரில் வடிவமைப்பில் மாற்றம் கண்டிருக்கிறது. இது கூடுதல் பொலிவை தருவதாக இருக்கிறது. இதேபோன்று, பின்பக்கமும் சில மாற்றங்களை கண்டிருக்கிறது.
பொருட்களை வைப்பதற்கான பூ்ட அறை தற்போது தாரள வசதிகொண்டதாக இருக்கும். டேஷ்போர்டு உள்ளிட்ட பாகங்களின் தரம் மேம்பட்டிருக்கிறது. புதிய பீட் நிச்சயம் பிற மாடல்களுக்கு அதிக போட்டியை தரும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சினை பொறுத்தவரையில் மாற்றங்கள் இருக்காது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய பீட் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








