பீட்டில் கன்வெர்ட்டிபிளை அறிமுகப்படுத்தும் போக்ஸ்வேகன்
தலைமுறைகளை கடந்து வெற்றிகரமான மாடலாக திகழ்ந்து வரும் பீட்டில் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. ஆம், விரைவில் பீட்டில் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை பார்வைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது போக்ஸ்வேகன்.
வித்தியாசமான ரசனை கொண்ட கோடீஸ்வரர்களின் முதல் தேர்வாகஇருக்கும் பீட்டிலின் கன்வெர்ட்டிபிள் மாடல், அந்த காருக்கு நிச்சயம் கூடுதல் ரசிகர்களையும், வாடிக்கையாளர்களை பெற்றுத் தரும் என்று கூறலாம்.
நவம்பரில் துவங்க இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் முதன்முறையாக பீட்டில் கன்வெர்ட்டிபிள் மாடலை காட்சிக்கு வைக்க உள்ளது போக்ஸ்வேகன். புதிய பீட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள கன்வெர்ட்டிபிள் பீட்டில் காரின் பிரத்யேக படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் கண்டு களியுங்கள்.

தலைமுறை மாற்றம்
72 ஆண்டுகளாக மார்க்கெட்டில் இருக்கும் பீட்டில் கார் முதன்முறையாக கன்வெர்ட்டிபிள் மாடலில் வர இருக்கிறது.

முதல் தரிசனம்
நவம்பர் 28ந் தேதி துவங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் கன்வெர்ட்டிபிள் பீட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

திறந்து மூடும் கூரை
50 கிமீ வேகத்தில் கார் செல்லும்போது கூட இதன் கூரையை திறந்து மூட முடியும்.

உட்புற வடிவமைப்பு
சொகுசு கார்களுக்கே உரித்தான சிறப்பு அம்சங்களை பீட்டில் கொண்டிருப்பதை காணலாம்.

மார்க்கெட் பிரவேசம்
தனது தாயகமான ஜெர்மனி மற்றும் அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின்
105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் தற்போது வருகிறது. ஆனால், கன்வெர்ட்டிபிள் பீட்டில் காரில் 200 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லி்ட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இருக்கை வசதி
புதிய பீட்டில் கன்வெர்ட்டிபிள் காரில் 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும்.

இதர சிறப்பம்சங்கள்
ஹெட் த்ரோக்ஸ் ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் ரோல்ஓவர் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








