மும்பையில் 24 மணிநேர மாருதி கார் சர்வீஸ் ஸ்டேஷன் திறப்பு

Car Engine Repair
நாட்டிலேயே முதன் முறையாக மும்பையில் 24 மணிநேரமும் கார்களை சர்வீஸ் செய்யும் சேவையை மாருதி துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 40 முதல் 50 கார்களை சர்வீஸ் செய்யும் வசதிகொண்ட இந்த சர்வீஸ் ஸ்டேஷனில் டிரைவர்கள் மற்றும் கார் உரிமையாளர்கள் இரவில் தங்கும் வசதியும் உள்ளது.

வாடிக்கையாளர் சேவையில் மாருதி கார் நிறுவனம்தான் முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனத்தின் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு சிறந்த சர்வீஸ் வசதியும் முக்கிய காரணம்.

அந்த அளவிற்கு வாடிக்கையாளரிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கும் மாருதி நிறுவனம் தற்போது மற்றுமொரு முன்னோடியான சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மும்பை, அந்தேரி பகுதியிலுள்ள மாருதியின் டீலரான போர்ட்பாயின்ட் நிறுவனத்தில் இந்த கார் சர்வீஸ் செய்யும் வசதி துவங்கப்பட்டிருக்கிறது. அதாவது, 24 மணி நேரமும் கார்களை சர்வீஸ் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கார்களை முதல் நாள் இரவு சர்வீஸ் கொண்டு வந்து விடும் வாடிக்கையாளர்களுக்கு மறுநாள் காலையில் டெலிவிரி கொடுத்து விடும் வகையில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு அலுவலக பணிகள் பாதிக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஆப்பரேட்டர்களின் கார்களும் இரவு கொண்டு வந்து விட்டால் மறுநாள் காலையில் அவர்களுக்கு கார்கள் சர்வீஸ் செய்து டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும். மேலும், அந்த டிரைவர்கள் இரவில் தங்குவதற்கு சர்வீஸ் ஸ்டேஷனிலேயே இலவசமாக படுக்கை வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், வாடிக்கையாளர் சேவையில் புதிய அத்யாயத்தில் மாருதி நுழைந்துள்ளது. போர்ட் பாயிண்ட் நிறுவனம் மும்பையில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக திகழ்கிறது.மும்பையில் 7 மாருதி ஷோரூம்களையும் நடத்தி வரும் இந்த நிறுவனம் , ஹீரோ மோட்டோ கார்ப் டீலராகவும், ஐஷர் வர்த்தக வாகனங்களுக்கான டீலராகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, March 26, 2012, 11:13 [IST]
English summary
In first of its kind in India, a Mumbai Maruti Suzuki car dealer has launched a 24-hour service centre in the city. The dealership, Fortpoint Automotive has started the day-and-night service centre at suburban Andheri in Mumbai and has the capacity to service 40-50 vehicles at the night time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+