பண்டிகை காலத்தில் வரிசை கட்டும் 30 புதிய கார் மாடல்கள்!

ஆண்டு தோறும் பண்டிகை காலம் வரும்போது கார் விற்பனை விர்ரென்று ராக்கெட் வேகம் பிடிக்கும். இதனால், பல நிறுவனங்கள் புதிய கார் மாடல்களை பண்டிகை காலத்தில் களமிறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பண்டிகை காலத்தை அலங்கரிக்க மாருதியின் புதிய குட்டி காரான ஆல்ட்டோ 800 முதல் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் வரை 30 புதிய கார் மாடல்களை வரிசை கட்டி நிற்கின்றன.
ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என கலவையாக மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க இருப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சில கார் மாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மாருதியின் ஆல்ட்டோ 800, செவர்லே செயில், மஹிந்திரா மினி ஸைலோ, போக்ஸ்வேகன் அப், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகியவை முக்கிய மாடல்களாக இருக்கின்றன.
பண்டிகை கால பட்டியலில் முதலாவதாக இன்று புதிய எலன்ட்ரா காரை ஹூண்டாய் களமிறக்குகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கார் என்ற பெருமையை புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 24ந் தேதி புதிய கேம்ரி பிரிமியம் செடான் காரை டொயோட்டா களமிறக்குகிறது.
அடுத்த மாதம் நிசான் நிறுவனத்தின் எவாலியா எம்பிவி கார் விற்பனைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து, ஏராளமான மாடல்கள் அடுத்தடுத்து களமிறக்க வாடி வாசலில் காத்துக் கிடக்கின்றன. பல்வேறு காரணங்களால் கார் மார்க்கெட் சோர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் புதிய கார் மாடல்கள் இந்த பண்டிகை காலம் நிச்சயம் வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என நம்பலாம்.
பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் கார் மாடல்கள்:
மாருதி ஆல்ட்டோ 800
மாருதி புதிய ரிட்ஸ்
ஹூண்டாய் ப்ளூயிடிக் எலன்ட்ரா
டாடா ஸ்டார்ம் எஸ்யூவி
டாடா மான்ஸா காம்பெக்ட் செடான்
டொயோட்டா புதிய கேம்ரி
போக்ஸ்வேகன் அப்
போக்ஸ்வேகன் புதிய பீட்டில்
செவர்லே செயில்
செவர்லே என்ஜாய்
செவர்லே செயில் செடான்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி
ஃபோர்டு புதிய என்டெவர் எஸ்யூவி
ஹோண்டா புதிய சிஆர்வி
நிசான் எவாலியா எம்பிவி
மிட்சுபிஷி மிராஜ்
ஃபியட் புண்ட்டோ எவோ
ரினால்ட் ஸ்கேலா
ஸ்கோடா ஃபேபியா ஸ்கவுட்
அசோக் லேலண்ட் ஸ்டைல்
ஃபோர்ஸ் எம்பிவி
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசடர்(4 மீட்டருக்கும் குறைவான காம்பெக்ட் மாடல்)
மஹிந்திரா ரேவா என்எக்ஸ்ஆர்(எலக்ட்ரிக் கார்)
மஹிந்திரா வெரிட்டோ(4மீட்டருக்கும் குறைவான காம்பெக்ட் செடான்)
மஹிந்திரா மினி ஸைலோ
மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன் 2 பிரிமியம் எஸ்யூவி
மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ்
ஆடி எஸ்6
புதிய போர்ஷே 911
ஜாகுவார் எக்ஸ்ஜேஎல்


Click it and Unblock the Notifications








