தர்பூசணி பழம் போன்ற கஸ்டமைசேஷன் கார்
கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் இந்த வேளையில் அனைவரும் குளிர்ச்சியை தேடி வருகின்றனர். கரன்ட் இல்லாமல் ஏசி இருந்தும் புண்ணியமில்லாத இந்த வேளையில், வாசகர்களின் கண்களுக்காவது குளிர்ச்சிப்படுத்த இந்த தர்பூஸ் காரை பார்வைக்கு விட்டுள்ளோம்.
கார்கள் மீது கொண்ட அலாதி காதல் கொண்ட ஒருவர்தான், தனது காரையே தர்பூஸ் பழம் போன்று பெயின்ட்டிங் செய்து அசத்தியுள்ளார். பார்த்தவுடன் சாட்சாத் இது தர்பூஸ் பழம்தான் என்று சத்தியம் அடித்து கூறும் அளவுக்கு தத்ரூபமாக தனது காரை பெயின்ட்டிங் செய்துள்ளார் அவர்.

தர்பூஸ் பழம் போன்று காரின் வெளிப்புறம் கிளி பச்சை, கரும் பச்சை நிறங்களிலும் கார் உள்பக்கம் முழுவதும் செவ செவ என சிவப்பு நிறத்திலும் கண்களை சுண்டி இழுக்கிறது.
தர்பூஸ் விதைகளை போன்று டேஷ்போர்டில் மியூசிக் சிஸ்டம், கைப்பிடிகள் ஆகியவை கருப்பு நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. லெதர் இருக்கைகள், உள்பக்க கூரையின் மேற்புறம் ஆகிய ஒரு பிட் இடம் கூட விடாமல் சிவப்பு நிறம் ஆக்கிரமித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வரும் இந்த வேளையில் வாசகர்களுக்கு இந்த தர்பூஸ் கார் நிச்சயம் கண்களை குளிர்வித்திருக்கும் என்று நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








