சென்னையில் உலகத் தரத்தில் உதயமாகும் புதிய கார் சர்வீஸ் ஸ்டேஷன்!

Bumpin Car Care
சென்னையில் பம்பின் என்ற பெயரில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கார் வாஷ் ஸ்டேஷன் வரும் 7ந் தேதி திறக்கப்பட உள்ளது.

கார் பராமரிப்பும் ஒரு கலைதான். காரை சுத்தமாக பேணி காப்பதன் மூலம் நம் அந்தஸ்தை மட்டுமல்ல, காரின் ஆயுளையும் கூட்ட முடியும். ஆனால், தற்போது கார் சர்வீஸ் ஸ்டேஷன்களில் பயன்படுத்தப்படும் மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற சோப்பாயில், ஷாம்பூ மற்றும் இதர பொருட்களால் நாம் ஆசை ஆசையாய் வாங்கிய கார் ஒரு சில ஆண்டுகளிலிலேயே பொலிவை இழந்துவிடுகிறது.

இந்த குறையை போக்கும் வகையில், மிகச் சரியான கட்டணத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கார் பராமரிப்பு பணிமனை சென்னை, விருகம்பாக்கம், 2/13.திருவேங்கடம் தெரு(ரெட்டி தெரு) என்ற முகவரியில் வரும் 7ந் தேதி திறக்கப்படுகிறது.

இந்த புதிய கார் சர்வீஸ் ஸ்டேஷனின் தனித்தன்மையே, இங்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு நவீன தொழில்நுட்பம் மூலம் கார் வாஷ் மற்றும் கார் டீட்டெயிலிங் பணிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பம்பின் கார் வாஷ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ராஜசேகரன் கூறுகையில்,"சரியான கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் நோக்கத்தில் இந்த உலகத் தரம் வாய்ந்த கார் பராமரிப்பு பணிமனையை திறக்கிறோம். பம்பின் கார் வாஷ் ஸ்டேஷனில் நீராவி மூலம் கார் வாஷ் செய்யப்படுகிறது.

ஒரு காருக்கு வெறும் 5 லிட்டர் தண்ணீரில் கார் வாஷ் செய்து தர உள்ளோம். இந்த புதிய நீராவி முறை சென்னை வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை தரும். கார்களின் பொலிவையும் வெகுவாக கூட்ட முடியும். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு மேலான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

சென்னை தவிர எதிர்காலத்தில் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரிலும் கார் வாஷ் ஸ்டேஷனை திறக்கும் திட்டமும் உள்ளதாக பம்பின் நிறுவனம் தெரிவித்துள்ளது. பம்பின் கார் வாஷ் மற்றும் கார் டீட்டெயிலிங் குறித்த கட்டண விபரங்களை அறிந்து கொள்வதற்கு கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும்.

http://bumpincarcare.com/

More from DriveSpark

Article Published On: Monday, June 4, 2012, 10:39 [IST]
English summary
A world class car care center will open at Virugampakkam, Chennai on 7th June. The new car care center named Bumpin will give world class service to its customers to come up with new techniques.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+