டீசல் கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை கூடுதல் வரி: மத்திய அரசு பரிசீலனை

ஸ்விப்ட்
டீசல் கார்கள் மீது 2.50 லட்சம் வரை கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் டீசல் நுகர்வு அதிகரித்துள்ளதால், டீசலுக்கு கூடுதல் மானியத் தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, டீசல் மானியத்தை முறைப்படுத்த டீசல் கார்கள் மீது கூடுதல் வரிவிதிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி மத்திய நிதி அமைச்சகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில், டீசல் நுகர்வு அதிகரிப்பதை தடுத்து மானியத்தை முறைப்படுத்த டீசல் கார்கள் மீது ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.55 லட்சம் வரை வரி விதிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.

3 காரணங்களை சுட்டிக் காட்டி டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதித்தே ஆக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ப்பால் ரெட்டியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், சிறிய டீசல் கார்கள் மீது ரூ.1.70 லட்சமும், நடுத்தர டீசல் கார்கள் மீது ரூ.2.55 லட்சமும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கு கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே கார் விற்பனை மந்தமாக உள்ள நிலையில், இந்தளவுக்கு கூடுதல் வரியை டீசல் கார்கள் மீது விதித்தால் விற்பனை சுத்தமாக படுத்துவிடும். இந்த முடிவு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2012, 10:34 [IST]
English summary
Diesel cars may get expensive by Rs 2.55 lakh, with the oil ministry planning to impose a special tax on such vehicles. The government plans to impose additional levies of Rs 1,70,000 on small diesel cars and Rs 2,55,000 on medium and large diesel vehicles like sedans and SUVs to check dieselisation of the economy, triggered by the widening gap between petrol and diesel prices.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+