ரேஸ் டிராக்கில் சூப்பர் கார் ஓட்டப் போகும் பாலிவுடன் நடிகர்கள்
அடுத்த மாதம் டெல்லி பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் அனில் கபூர் ஆகியோர் தங்களது சூப்பர் கார்களை ஓட்டி திறமையை நிரூபிக்க சவால் விட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் அஜய் தேவ்கன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் இருவரும் மும்பையிலுள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அடுத்த மாதம் 23ந் தேதி டெல்லி அருகே நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் இருவரும் தங்களது லம்போர்கினி சூப்பர் கார்களை ஓட்டி காண்பித்து, யார் கில்லாடி என்பதை நிரூபிக்க உள்ளனர். இந்த விஷயம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








