ப்ளூயிடிக் எலன்ட்ராவின் தகவல்களை வெளியிட்ட ஹூண்டாய்

ப்ளூயிடிக் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய எலன்ட்ரா காரை அடுத்த மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக அந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

மிரட்டலான பாடி லைன்கள் கவர்ச்சியான முகப்பு, கெத்தான புட்டம் என மார்க்கெட்டை கலக்க எலன்ட்ரா தயாராக இருக்கிறது. உட்புறமும் ஹூண்டாயின் தரமான பாகங்களாலும், கைவண்ணத்தாலும் மெருகூட்டப்பட்டுள்ளது.

Hyundai Motors

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் புதிய எலன்ட்ரா கிடைக்கும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 149.5 பிஎஸ் பவரையும், 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் 128 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

இரண்டு மாடல்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும். டூவல் ஸோன் ஏசி, பவர் டிரைவர் சீட், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர், ரியர் வியூ கேமரா, சிலிக்கா டயர்கள், 16 இஞ்ச் அலாய் வீல்கள் என அம்சங்களை அடுக்கலாம்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ப்ளூடூத், பார்க்கிங் சென்சார், சோலார் கிளாஸ், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகளும் கூடுதல் அம்சங்கள். இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஏர்பேக்குகள் என பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை.

மொத்தம் 6 வண்ணங்களில் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ராவை தேர்ந்தெடுக்கலாம். டி செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்பட இருக்கு் இந்த புதிய செடான் கார் டொயோட்டா கரொல்லா, ஹோண்டா சிவிக், செவல்ரே க்ரூஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை தரும்.

ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் மார்க்கெட்டை ப்ளூயிடிக் எலன்ட்ரா வந்தடையும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2012, 13:43 [IST]
English summary
Hyundai Elantra has been one of the much awaited upcoming launches in the country. Now reports are that the stunning new Fluidic Elantra will be launched as early as August this year.Also the brochure of the all new Elantra has been leaked on the internet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+