டீசல் மாடல் இல்லாமல் விற்பனையில் வெளுத்துகட்டும் பட்ஜெட் கார்கள்

பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில், டீசல் மாடல்கள் இல்லாத நிலையிலும், ரூ.3.5 லட்சத்திற்குள் விலை கொண்ட பட்ஜெட் கார்கள் விற்பனையில் பின்னி எடுத்து வருகின்றன. மாதாமாதம் வெளியாகும் விற்பனை பட்டியல்களில் மாருதி ஆல்ட்டோ முதலிடத்திலும், வேகன்-ஆர் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
மாருதி ஆல்ட்டோ பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வேகன்-ஆர் பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி ஆகிய மாடல்களி்ல் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, ஹூண்டாய் இயான் பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடலிலும், டாடா நானோ பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய விலை முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் குறைந்தது ரூ.80,000 கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் சுமையை கூட்டுவதாக இருக்கிறது. தவிர, இந்த கார்களின் பராமரிப்பு செலவும் குறைவு.
எனவே, டீசல் கார்களைவிட பட்ஜெட் கார்களுக்கு செல்வது மேல் என்று வாடிக்கையாளர்கள் முடிவு செய்துவிடுகின்றனர். ரூ.5 லட்சத்துக்கும் மேலான விலையில்தான் என்ட்ரி லெவல் டீசல் கார்களே கிடைப்பதால் பட்ஜெட் கார்கள் விற்பனை தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








