நானோ கார் வாங்கிய அமெரிக்காவின் பிரபல டிவி தொகுப்பாளர்

தீராத ஆட்டோமொபைல் காதலரான இவர் அத்தோடு நின்று விடாமல் விதவிதமான கார்களையும், பைக்குகளையும் வாங்கி சேகரித்து பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆம். இதுவரை 200க்கும் மேற்பட்ட கார்களையும், 90க்கும் மேற்பட்ட பைக்குகளையும் வாங்கி தனது ஷெட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார்.
விண்டேஜ் கார்கள், கஸ்டமைஸ் கார்கள் மற்றும் சூப்பர் கார்கள் இதில் அடக்கம். இதேபோன்று அனைத்து ரக பைக்குகளும் இருக்கும் இவரது ஷெட்டை பார்த்தால் மினி வாகன மியூசியமாகவே வியக்க வைக்கிறது.
இந்தநிலையில், உலகின் மிகக் குறைந்த விலை காரான டாடா நானோவை ஜே லெனோ சமீபத்தில் இறக்குமதி செய்து தனது கார் கலெக்ஷன் பட்டியலில் இணைத்துள்ளார். மேலும், நானோ காரை தனது ஷெட்டில் முறைப்படி இணைக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியும் நடத்தது. அதில், நானோ காருடன் ஜே லெனோ போஸ் கொடுத்தார்.
எப்படி தெரியுமா?.. நானோ கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு பின்புறம் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது. நானோ காரிலும் இந்திய தேசியக் கொடி வண்ணத்தின் மூவர்ண கோடுகள் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒலித்த மெலடி பாலிவுட் பாடலுக்கு காரை சுற்றிலும் பாலிவுட் நடனக் கலைஞர்கள் இசைக்கேற்றவாறு நடனமாடினர்.
அப்போது நானோ காருக்கு முன்னால் வந்த ஜே லெனோ இந்திய பாரம்பரிய உடையான ஷெர்வானி அணிந்து, இந்தியாவில் கூறுவதுபோன்று இருகையையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். மேலும், உலகின் மிகக்குறைந்த விலை காரான நானோவை வாங்கியது குறித்தும் பெருமையுடன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications








