மஹிந்திரா குழுமத்தின் புதிய தலைவராக ஆனந்த் மஹிந்திரா பொறுப்பேற்பு

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவராக கேசுபாய் மஹிந்திரா இருந்து வந்தார். கடந்த 45 ஆண்டுகளாக மஹிந்திரா நிறுவனத்தை பல்வேறு வகையில் வழிநடத்தி நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்த்தி பெருமை கேசுபாய் மஹிந்திராவையே சாரும்.
வாகன தயாரிப்பு மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சுற்றுலா என பல துறைகளில் மஹிந்திரா முன்னிலை வகிப்பதில் கேசுபாய்க்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து கேசுபாய் மஹிந்திரா நேற்று ஓய்வு பெற்றார்.
இதற்காக நடந்த பிரிவு உபச்சார விழாவில் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முக்கிய பங்குதாரர்கள் கலந்துகொண்டு கேசுபாயை வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கேசுபாய் மஹிந்திரா, புதிய தலைவராக பொறுப்பேற்கும் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா குழுமத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தற்போது மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவராக இருந்து வந்த ஆனந்த் மஹிந்திரா புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications








