எக்ஸ்யூவி சிறுத்தை; ஜிப்ஸி முயல்: ஆனந்த் மஹிந்திராவின் ஒப்பீடு
எக்ஸ்யூவியை சிறுத்தையுடனும், மாருதி ஜிப்ஸியை முயலுடனும் ஒப்பிட்டு மஹிந்திரா துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பதிவு செய்தி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரை பின்பற்றி வரும் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவரான ஆனந்த் மஹிந்திரா திகழ்கிறார். இவரை டுவிட்டர் சமூக தளத்தில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டரில் ஆனந்த் மஹிந்திராவை பின்பற்றி வரும் ஒருவர் மஹி்ந்திரா நடத்தும் கிரேட் எஸ்கேப் ஆஃப் ரோடு பயணத்தில் தனது மாருதி ஜிப்ஸி காருடன் கலந்து கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலை பதிவு செய்த ஆனந்த் மஹிந்திரா,"சிறுத்தையின் வசிப்பிடத்தில் முயல் சுதந்திரமாக உலவ முடியுமா?" என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது எக்ஸ்யூவியை சிறுத்தையுடனும், மாருதி ஜிப்ஸியை முயலுக்கு ஒப்புமை செய்து கிரேட் எஸ்கேப் ராலியில் ஜிப்ஸி கலந்து கொள்ள முடியாது என்பதுபோல் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு அவரை டுவிட்டரில் பின்பற்றி வரும் ஏராளாமானோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு ஆனந்த் மஹிந்திரா விளக்கமளித்துள்ளார். அதில், அந்த கருத்தை நகைச்சுவையாக குறிப்பிட்டதாகவும், உள்நோக்கத்துடன் குறிப்பிடவில்லை என்றும் தெரிவி்த்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் கிரேட் எஸ்கேப் ராலியை மஹிந்திரா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இது போட்டி இல்லை என்பதால் ஆர்வமுள்ள மஹிந்திரா எஸ்யூவி வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்களது கார்களுடன் இதில் கலந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டு வரை ஸ்கார்ப்பியோ மற்றும் தார் ஜீப்தான் இந்த ராலியில் அதிகம் பங்கேற்றது. ஆனால், இந்த ஆண்டு எக்ஸ்யூவியும் கலந்துகொண்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ளத்தான் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் அவரது பாலோவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








