ஆன்ட்ராய்டு வசதியுடன் அசத்தும் கார் ரியர் வியூ மிரர்

Android Car Rear View Mirror
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் கொண்ட ரியர் வியூ மிரர் அமெரிக்காவில் நடந்த எலக்ட்ரானிக் சாதன கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் இந்த ரியர் வியூ மிரர் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பிரிட்ஜ், டிவி என அனைத்தும் ஆன்ட்ராய்டில் இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஆன்ட்ராய்டை மையமாக வைத்து ஏராளமான சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் உலகிலும் ஆன்ட்ராய்டு புகுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரைடீம் என்ற நிறுவனம் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய ரியர் வியூ மிரரை பார்வைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

காரின் பின்புறம் இருக்கும் கேமராக்களுடன் இந்த ஆன்ட்ராய்டு ரியர் வியூ மிரர் இணைக்கப்பட்டிருக்கும். டேஷ் போர்டில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரியர் வியூ மிரரில் பின்புறம் வரும் வாகனங்களை தெள்ளத் தெளிவாக பார்க்க முடியும்.

இதுதவிர, இந்த ரியர் வியூ மிரர் பல்முனை பயன்பாடு கொண்டதாக இருக்கும். ரியர் வியூ மிரராக மட்டுமின்றி மியூசிக் சிஸ்ட்ம், ஸ்மார்ட்போனாகவும் செயல்படும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை நிலையில் இருக்கும் இந்த புதிய ரியர் வியூ மிரர் அடுத்த ஆண்டு வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரைடீம் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 23, 2012, 15:59 [IST]
English summary
Rydeen has developed an Android operating system based rear-view mirror.At present, Rydeen is just using the touchscreen rear-view mirrors as research tools. And the production version of this advanced rear-view mirror may take the place in 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+