கார் ஸ்டீயரிங் வீலில் பொருத்தும் ரிமோட் கருவி: ஆப்பிள் அறிமுகம்

காரில் செல்லும்போது வழிகாட்டுவதற்கும், பொழுதுபோக்கு வசதிகளை தருவதிலும் தற்போது ஆப்பிள் சாதனங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆனால், திடீரென அழைப்புகள் வந்தாலோ அல்லது பிற வசதியை பெறுவதற்கு இயக்கும்போது சிறிய சிரமங்கள் இருக்கின்றன. இதனால், கார் ஓட்டும்போது கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்டும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த குறையை போக்கும் விதத்தில், ஐபோன், ஐபேட், ஐபாட் ஆகிய சாதனங்களை எளிதாக கட்டுப்படுத்தும் வகையில், புதிய ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவிக்கு சமீபத்தில்தான் ஆப்பிள் காப்புரிமை பெற்றது.
ஸ்டீயரிங் வீலில் பொருத்திக் கொள்ளும் வகையில் சிறிய அளவில் இருக்கும் இந்த கருவி ப்ளூடூத் பிற தொடர்பு வசதிகள் மூலம் ஆப்பிள் சாதனங்களுடன் இணைத்துக்கொண்டால் போதுமானது. எளிதாக ஆப்பிள் சாதனங்களை கட்டுப்படுத்தலாம்.
கார் ஓட்டும்போது சாலையிலிருந்து கவனம் பிறழாது என்பதால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








