வெளிநாடுகளில் வாகன சோதனை சேவையை பரப்பும் அராய்!

ARAI
ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களை தொடர்ந்து, புனேயை சேர்ந்த ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனமான ஏஆர்ஏஐ வெளிநாட்டுகளில் தனது சேவையை விரிவுப்படுத்த உள்ளது.

புனேயில் இயங்கும் இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் சோதனை நிறுவனம்(ஏஆர்ஏஐ)ஆட்டோமொபைல் துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும், கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைகள் நடத்தி சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தனது சேவையை வெளிநாடுகளிலும் துவங்க ஏஆர்ஏஐ முடிவு செய்துள்ளது. சீனா, தென்கொரியா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரிபாக நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.

இதில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது தாய் நாட்டில் சோதனை மையத்தை நிறுவுமாறு ஏஆர்ஏஐ நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சீனா, தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஏஆர்ஏஐ பேச்சு நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் தனது வாகன ஆராய்ச்சி மற்றும் சோதனை மையத்தை திறக்க ஏஆர்ஏஐ திட்டமிட்டுள்ளது. கார் மற்றும் பைக் நிறுவனங்களின் வழியில் ஏஆர்ஏஐ நிறுவனமும் வெளிநாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2012, 12:47 [IST]
English summary
The Pune based Autmobile Research association of India(ARAI) to go on overseas market for offering automotive testing services. The ARAI planning to offer its services in the countrys like China and South Korea. The company also to offer Singapore and malaysia.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+