சென்னை லேலன்ட் 10 மாடி கட்டடத்தில் டோணியின் பிரம்மாண்ட போஸ்டர்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக ஹிந்துஜா குழுமத்தின் கீழ் செயல்படும் அசோக் லேலன்ட் திகழ்கிறது.இந்த நிறுவனத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை விளம்பர தூதராக யாரும் நியமிக்கப்பட்டதில்லை.
இந்த நிலையில், முதன்முறையாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முதல் விளம்பர தூதராகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி. மேலும், சென்னையிலுள்ள அசோக் லேலண்ட்டின் 10 மாடிகள் கொண்ட அலுவலக கட்டடத்தில் அசோக் லேலண்ட் சீருடையுடன் டோணி வணக்கம் தெரிவிப்பது போன்ற பிரம்மாண்ட போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கிறது.
டோணி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாசரி கூறுகையில்," எங்களது நிறுவனத்தின் மதிப்புக்கு ஏற்ற தூதராக டோணிதான் மனதில் பட்டார். வேறு ஒருவரையும் நாங்கள் நினைக்கக்கூட இல்லை. டோணி மூலம் எங்களது தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications