நிசான் இவாலியாவின் நகல் காரை களமிறக்கும் லேலண்ட்

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எம்பிவியை லேலண்ட் பார்வைக்கு வைத்திருந்தது. வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருள் மாடல்களில் இந்த எம்பிவி விற்பனைக்கு வர இருக்கிறது.
தனது கூட்டணி நிறுவனமான ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் இவாலியா எம்பிவியின் ஜெராக்ஸ் காப்பியே இந்த ஸ்டைல். நிசான் சன்னியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எம்பிவியிலும் பொருத்தப்பட உள்ளது.
இந்த எஞ்சின் 64 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த புதிய எம்பிவி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எஸ்ஆர்எஸ் ஏர்பேக், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர் ஆகிய வசதிகளை ஸ்டைல் கொண்டிருக்கும்.
பக்கவாட்டில் தள்ளும் வசதிகொண்ட ஸ்லைடர் கதவுகளுடன் வரும் இந்த புதிய எம்பிவி கார் ரூ. 8 லட்சம் விலையில் ஸ்டைலை விற்பனைக்கு கொண்டு வர அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








