வால்வோவுக்கு போட்டியாக வரும் அசோக் லேலண்டின் புதிய சிட்டி பஸ்

நாட்டின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஜன்பஸ் என்ற பெயரில் புதிய சிட்டி மாடலை பார்வைக்கு வைத்திருந்தது.
இந்த புதிய சிட்டி பஸ் பல புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும், முன்பக்க எஞ்சின் கொண்ட உலகின் முதல் தாழ்தளம் கொண்ட (வால்வோ தாழ்தள பஸ்களில் எஞ்சின் பின்புறம் இருக்கும்) பஸ் என்ற பெருமையையும் இந்த பஸ் பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களில் இந்த புதிய பஸ் பயணிகளுக்கு நிறைவான பயண அனுபவத்தை கொடுக்கும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. வால்வோ உள்ளிட்ட சிட்டி பஸ்களை ஒப்பிடும்போது இந்த புதிய பஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்பதால், அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








