வாகனங்களின் விலையை ஒரு சதவீதம் குறைத்த அசோக் லேலன்ட்
வர்த்தக வாகனங்களுக்கான சேஸிஸ் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், வாகனங்களின் விலையை ஒரு சதவீதம் குறைப்பதாக அசோக் லேலன்ட் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
பட்ஜெட்டில் வர்த்தக வாகனங்களின் சேஸிஸ் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மாத துவக்கத்தில் வாகனங்களின் விலையை 5 சதவீதம் வரை கணிசமாக உயர்த்தியது லேலன்ட்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் வர்த்தக வாகனங்களின் மீது விதிக்கப்பட்ட வரியை ஒரு சதவீதம் குறைத்து 14 சதவீதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, தற்போது டிரக்குகளின் விலையை ஒரு சதவீதம் குறைப்பதாக லேலன்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை கணிசமான வளர்ச்சி பெற்று வருகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிரக்குகள் மீதான கூடுதல் வரியால் விற்பனை பாதிக்கப்படும் நிலை உருவானது. இந்த நிலையில், வர்த்தக வாகனங்களின் மீதான கூடுதல் வரியை மத்திய அரசு ஒரு சதவீதம் குறைத்துள்ளதால் வாடிக்கையாளர்களின் சுமை சற்று குறையும்.


Click it and Unblock the Notifications








