டெல்லியில் புதிய ஷோரூம் திறந்த ஜேம்ஸ்பாண்டு புகழ் அஸ்டன் மார்ட்டின்

Aston Martin Vantage
ஜேம்ஸ்பாண்டு படங்களில் சீறிப் பாயும் அஸ்டன் மார்ட்டின் கார்கள் தற்போது இந்தியாவிலும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மும்பையில் தனது முதல் இந்திய ஷோரூமை திறந்து கார்களை விற்பனை செய்து வரும் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தற்போது தனது இரண்டாவது ஷோரூமை டெல்லியில் திறந்துள்ளது.

தெற்கு டெல்லியில் 13000 சதுர அடி பரப்பில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு எளிதான சேவை கிடைக்கும் வகையில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது.

செலக்ட் கார் நிறுவனம்தான் தற்போது அஸ்டன் மார்ட்டின் கார்களுக்கான இந்த புதிய ஷோரூமை அமைத்துள்ளது. இதுகுறித்து செலக்ட் கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்," உலக அளவில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பிராண்டான அஸ்டன் மார்ட்டின் கார்களை விற்பனை செய்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு பணியாற்றுவோம்," என்றார்.

இந்த புதிய ஷோரூமில் அஸ்டன் மார்டடின் தயாரிக்கும் அனைத்து மாடல்களையும் புக்கிங் செய்து பெற்றுக்கொள்ளலாம். வி12 வான்டேஜ், வான்டேஜ் எஸ், வி8 வான்டேஜ் கூபே, வி8 வான்டேஜ் ரோட்ஸ்டெர், டிபி9 கூபே, டிபிஎஸ் கூபே, டிபிஎஸ் வோலன்டே ஆகிய கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, May 7, 2012, 8:40 [IST]
English summary
Aston Martin has officially opened a new four-car showroom in up-market South Delhi. The new showroom spread across 13,000 square feet has the customer reception area, a new car gallery, finished in distinctive Aston Martin Corporate Identity. The new Aston Martin Showroom will also incorporate an approved service centre to cater for the needs of Aston Martin owners throughout the area.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+