அஸ்டன் மார்ட்டினின் வி10 வான்டேஜ் ரோட்ஸ்டெர் அறிமுகம்
வி12 வான்டேஜ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை அஸ்டன் மார்ட்டின் அறிமுகம் செய்துள்ளது. லிமிடேட் எடிசனாக வந்துள்ள இந்த கார் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 515 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். வெறும் 4.5 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

சாதாரண வான்டேஜ் மாடலிலிருந்து இதன் பின்புற வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது. இதுதவிர, சேஸிஸிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காற்றை கிழித்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக முன்பக்கம் ஏர்டேக் கொஞ்சம் தணிவாக இட மாற்றம் கண்டுள்ளது.
கார்பன் பைபரை பயன்படுத்தி இழைத்துக் குழைக்கப்பட்டுள்ள இந்த கார் கண்களை வெகுவாக கவர்கிறது. அதிக பாதுகாப்புகளுக்காக இந்த காரில் பிரெலி பி ஸீரோ கார்ஸா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் கார் அதிகபட்சம் மணிக்கு 305 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அடுத்த ஜேம்ஸ்பாண்ட சினிமாவில் நிச்சயம் இந்த காருக்கு இடம் இருக்கும் என்று நம்பலாம். இங்கிலாந்தில் இந்த காருக்கு ரூ.1.29 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








