ரூ.27.33 லட்சத்தில் புதிய ஏ4 சொகுசு காரை அறிமுகப்படுத்திய ஆடி

ஜெர்மானிய நிறுவனமான ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தக்கவைக்கும் விதமாக புதிய கார்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
கண்களை கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, பவர்புல் எஞ்சின், சொகுசு வசதிகள் என வாடிக்கையாளர்களை அனைத்து விதத்திலும் ஆடி கார்கள் தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளன.
அந்த வகையில், தற்போது புதிய ஏ4 சொகுசு காரை ஆடி அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ள இந்த புதிய ஏ4 கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலைவிட ரூ.60 விலை குறைவு. புதிய ஏ-4 செடான் கார் மூன்று எஞ்சின் மாடல்களில் கிடைக்கும்.
1.8 லிட்டர் எஞ்சின் மாடல் ரூ.27.33 லட்சம் விலையிலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ரூ.29.38 லட்சம் விலையிலும், 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ரூ.38 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஆடி தெரிவித்துள்ளது.
புதிய ஏ4 செடான் காரின் புதிய எஞ்சின் தொழில்நுட்பம் மூலம் 10 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்று ஆடி தெரிவித்துள்ளது. தவிர, வெளிப்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை ஏ4 கண்டிருக்கிறது.
மறுவடிவமைப்பு பெற்ற எல்இடி ஹெட்லைட், சிறிய மாற்றம் கண்டுள்ள பானட் வடிவமைப்பு, டேஞ்சர் லைட், இரட்டை குழல் துப்பாக்கி போன்ற இரட்டை சைலென்சர் ஆகியவை கூடுதல் பொலிவை ஆடி ஏ4 காருக்கு கொடுக்கிறது. ஆங்காங்கே க்ரோம் பினிஷிங்கும் ஏ4 காரின் பொலிவை கூட்டுகிறது.


Click it and Unblock the Notifications








