ரூ.25 லட்சத்தில் வரும் புதிய காம்பெக்ட் சொகுசு கார்கள்

பென்ஸ் கார்
ரூ.25 லட்சம் விலையில் இளைஞர்களை கவரும் அம்சங்களுடன் புத்தம் புதிய காம்பெக்ட் கார்களை களமிறக்க முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நம் நாட்டு மார்க்கெட்டில் தற்போது 30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் சொகுசு கார்கள் கிடைக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக குறைந்த விலை கொண்ட சொகுசு கார்களை களமிறக்க ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதில், முதலாவதாக பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் பி கிளாஸ் காரை அறிமுகப்படுத்தியது. மேலும், இதை விட குறைந்த விலையில் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதேபோன்று, ஆடி நிறுவனம் ஏ-3 குறைந்த விலை சொகுசு செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனமும் புதிய பிளாட்பார்மில் காம்பெக்ட் கார்களை வடிவமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த புதிய கார்கள் சொகுசு மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம், தங்களது விற்பனையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்த முன்னணி நிறுவனங்கள் கருதுகின்றன.

தாராள இடவசதி, நவீன தொழில்நுட்பங்கள், கட்டுறுதி என அனைத்து அம்சங்களிலும் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளன. எனவே, குறைந்த விலையில் வரும் புதிய காம்பெக்ட் கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆவல் எழுந்துள்ளது.

Article Published On: Wednesday, August 8, 2012, 13:09 [IST]
English summary
German premium car makers BMW, Audi and Mercedes-Benz are looking to boost their sales by launching cheaper cars priced at Rs.25 lakhs. These cars are aimed at young car buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+