2015 ம் ஆண்டில் க்யூ2 எஸ்யூவியை களமிறக்கும் ஆடி

பென்சை பின்னுக்குத் தள்ளிவிடுவோம் என்று கூறி அதன்படியே செய்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த இரு ஆண்டுகளுக்குள் பிஎம்டபிள்யூவையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த தீருவேன் என்ற ஆவேசத்துடன் களமிறங்கியுள்ளது ஆடி.
வாடிக்கையாளர்களின் கவனம் எந்த விதத்திலும் திரும்பாத வகையில், அனைத்து ரகத்திலும் அடுத்ததடுத்து புதிய மாடல்களை வரிசையாக களமிறக்கி வருகிறது ஆடி.
இந்த வரிசையில், க்யூ2 எஸ்யூவியையும் அடுத்த இரு ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆடி. இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.
க்ராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த க்யூ2 எஸ்யூவியில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும் என்று ஆடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. க்யூ3 எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று ஆடி கூறியிருந்தது. இதேபோன்று, வெறும் 5 நாட்களில் 500 க்யூ3 கார்களும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன.
இதேபோன்று, க்யூ2 எஸ்யூவிக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று ஆடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications