ஏப்ரல் கார் விற்பனையில் பிஎம்டபிள்யூவை முந்திய ஆடி

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆடி சொகுசு கார் நிறுவனம், தனது சக நாட்டு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களு்ககு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடி கார்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனையில் பென்ஸ் நிறுவனத்தை முந்திய ஆடி கடந்த மாத விற்பனையின்படி முதலிடத்தில் இருந்த பிஎம்டபிள்யூவையும் முதன்முறையாக விஞ்சியுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்க மார்க்கெட்டுகளில் ஆடி கார் விற்பனை வெளுத்து வாங்குகிறது. இதனால், ஆடியின் கார் விற்பனை வளர்ச்சி ராக்கெட் வேகமெடுத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் சர்வதேச அளவில் மொத்தமாக 1,25,200 கார்களை ஆடி விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூவை முந்தியுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் 1,21,476 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த மாதம் ஆடி கார் விற்பனை 14.4 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பிஎம்டபிள்யூ விற்பனை 7.4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் விரைவில் பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி ஆடி முதலித்துக்கு முன்னேறும் என்று மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆடி நிறுவனத்தால் பிஎம்டபிள்யூ பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








