பிஎம்டபிள்யூவுக்கு போட்டியாக டுகாட்டியை வாங்க அப்ளிகேஷன் போட்ட ஆடி

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலக அளவில் பெயர்பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு அதிகப்படியான நிதி ஆதார தேவையை கருத்தில்க்கொண்டு டுகாட்டியை நிறுவனத்தை விற்பனை செய்வதாக அதன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, டுகாட்டியை வாங்குவதற்கு உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் நீயா நானா போட்டியில் இறங்கியுள்ளன. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களும் டுகாட்டியை வாங்கும் முயற்யில் இறங்கியுள்ளன.
இந்தியாவின் மஹிந்திரா மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனங்கள் டுகாட்டியை வாங்குவதற்கு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை மஹிந்திரா மறுத்துவிட்டது. ஆனால், ஹீரோ முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், வோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் ஆடி சொகுசு கார் நிறுவனமும் டுகாட்டியை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூவுக்கு போட்டியாக வோக்ஸ்வேகன் தனது ஆடி பிராண்டு மூலமாக டுகாட்டியை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டுகாட்டியின் அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் இலகு எடை கொண்ட எஞ்சின் தொழில்நுட்பத்தை பெறுவதற்காக ஆடி களமிறங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாத மத்தியில் இதற்கான முடிவை ஆடி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








