ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் ஆடியின் புதிய திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு கார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வரும் 2015ம் ஆண்டுக்குள் முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய சேவைகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆடி கார் லைப் அட்வான்ஸ் என்ற புதிய ஒருங்கிணைந்த சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், எளிய தவணை முறையில் கார் கடன், கார் பராமரிப்பு, நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி உள்ளிட்டவைகளுக்கு சலுகைகளுடன் கூடிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ஆடி வழங்குகிறது. மேலும், காப்பீடுக்கான இழப்பீடை உடனடியாக பெறும் வசதியும் இந்த புதிய திட்டத்தில் இருக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த சேவை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் உலகத் தரம் வாய்ந்த சேவையை பெற முடியும் என ஆடி தெரிவித்துள்ளது. ஏ4, ஏ6 செடான் கார்கள் மற்றும் க்யூ5 எஸ்யூவி ஆகிய மூன்று கார்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த சேவை கிடைக்கும் என ஆடி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








