இந்த ஆண்டு 3 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் ஆடி

Audi Car Launch
இந்த ஆண்டு 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர ஆடி திட்டமிட்டுள்ளது. இதில், இரண்டு கார்கள் இந்தியாவில் அசெம்பிளிங் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடி கார்கள் இந்தியாவில் வெகுவாக பிரபலமாகி வருகிறது. இதனால், ஆடி கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையில் அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்குள் 3 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறியதாவது:

"எங்களது பிராண்டுக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்ட செல்கிறது. விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். கடந்த மாதம் 5,511 கார்களை விற்பனை செய்துள்ளோம்.

விற்பனையை தக்கவைக்கவும், அதிகரிக்கவும் இந்த ஆண்டு 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இந்த மாதம் டிடி பிரிமியம் காரை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, ஆடி க்யூ3 எஸ்யூவி மற்றும் எஸ் 6 கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம், எங்களது விற்பனை அதிக ஏற்றம் பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 3, 2012, 11:46 [IST]
English summary
German premium car maker Audi to launch three new models in the India by this year. Addressing the media persons, Audi India Director Michael Perschke said that company is planning to launch its Audi TT by this month end while the anticipated Audi Q3 will follow TT and then sports sedan Audi S6 will be launched. However, decision will be based on the feasibility of products in the country, he added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+