2016ம் ஆண்டில் முதல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த ஆடி மும்முரம்

செடான் மற்றும் எஸ்யூவி ரக சொகுசு கார்கள் தயாரிப்பில் ஆடி சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், தனது முதல் ஸ்போர்ட்டி எம்பிவி காரை வடிவமைக்கும் பணிகளில் ஆடி தீவிரமாகியிருக்கிறது.
போக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். 7 பேர் செல்லும் வகையில் இருக்கைகளை கொண்டிருக்கும் இந்த புதிய எம்பிவி பெட்ரோல் மற்றும் டீசலில் வர இருக்கிறது.
இந்த புதிய எம்பிவியில் 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 222 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினுடன் வர இருக்கிறது. இதுதவிர, ஹைபிரிட் மாடலும் வர இருக்கிறது.
ஹைபிரிட் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 107 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். வரும் 2016ம் ஆண்டில் ஆடியின் புதிய எம்பிவி மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








