ரூ.48.36 லட்சத்தில் ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

மேல்தட்டு வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிடி ஸ்போர்ட்ஸ் காரை ஆடி கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் கூபே வடிவமைப்புடன், ஆடி கார்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடன் வந்துள்ளது ஆடி டிடி.

புதிய டிடி ஸ்போர்ட்ஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 214 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், வெறும் 5.6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டவல்லது. தவிர, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இருக்கிறது.

வரும் 2015ம் ஆண்டில் முதல் இடத்துக்கு முன்னேறும் வகையில், புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஆடி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில், முதலாவது மாடல்தான் இந்த டிடி ஸ்போர்ட்ஸ் கார்.

வரும் ஜூன் மாதம் முதல் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஆடி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மட்டும் 50க்கும் மேற்பட்ட டிடி ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்ய ஆடி இலக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 24, 2012, 12:57 [IST]
English summary
German luxury car maker Audi India has launched of its much awaited sports car TT in India at Rs.48.36 lakh(Ex.show room Delhi). The Audi TT euipped with 2.0 liter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+