லண்டனில் முதல் டிஜிட்டல் கார் ஷோரூம் திறந்த ஆடி

லண்டன் மாநகரில் தனது முதல் டிஜிட்டல் கார் ஷோரூமை திறந்திருக்கிறது ஆடி கார் நிறுவனம்.

ஷோரூம்களில் இருக்கும் இட வசதியில் அனைத்து கார்களையும் நிறுத்த முடியாத நிலை இருக்கிறது. சில மாடல்களை மட்டும் வாடிக்கையாளரின் பார்வையிட முடிகிறது. மேலும், வேரியண்ட் வாரியாக வசதிகளை விளக்குவதிலும், வாடிக்கையாளர் தெரிந்து கொள்வதிலும் பல நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன.

இதை தவிர்க்கும் வகையில் தனது முதல் டிஜிட்டல் கார் ஷோரூமை லண்டன் மாநகரில் திறந்திருக்கிறது ஆடி கார் நிறுவனம். இந்த டிஜிட்டல் ஷோரூமில் மிகப் பெரிய திரை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஆடியின் அனைத்து கார்களை பற்றிய விபரங்களை திரையிட்டு காண்பிக்கின்றனர்.

Audi Digital Showroom

தவிர, கார் கிளம்பும்போது, கதவை மூடும்போது வரும் சப்தங்களையும் வாடிக்கையாளர் கேட்கும் வகையில் இந்த டிஜிட்டல் வீடியோ தொகுப்பை ஆடி தயாரித்துள்ளது. காரின் எஞ்சின், கியர் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற, 20 புதிய ஷோரூம்களை திறக்க ஆடி திட்டமிட்டுள்ளது.

ஆடி கார்களின் பெர்ஃபார்மென்சை வீடியோவாக பார்த்த வாடிக்கையாளர்கள் அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பினால் அதற்கும் இந்த ஷோரூமில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த புதிய முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும் என்று ஆடி நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2012, 14:42 [IST]
English summary
Luxury carmaker Audi has opened its first digital showroom London's Piccadilly Circus. The state of art showroom - Audi City relies on digital presentations rather than displaying actual cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+