இதுவரை இல்லாத அளவு செப்டம்பரில் ஆடி கார் விற்பனை ஜோர்

கடந்த மாதம் ஆடி நிறுவனம் 1011 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 82 சதவீதம் கூடுதலாகியிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புதிய மைல்கல்லையும் விற்பனையில் கடந்துள்ளது ஆடி. அதாவது, கடந்த ஆண்டு மொத்தமாக 5511 கார்களை ஆடி விற்பனை செய்திருந்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கடந்த ஆண்டு விற்பனையை தாண்டியுள்ளது. கடந்த மாதம் வரை அந்த நிறுவனம் மொத்தம் 6417 கார்களை விற்பனை செய்துள்ளது.
நடப்பு ஆண்டில் மொத்தம் 8,000 கார்களை விற்பனை செய்ய ஆடி இலக்கு வைத்துள்ளது. பண்டிகை காலத்தில் கார் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அடுத்து வரும் மாதங்களில் ஆடி எதிர்பார்க்கும் அளவை காட்டிலும் கூடுதல் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனையில் புதிய மைல்கல்லை தாண்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் கார் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications








