ஒரு சில நாளில் ஆடி க்யூ3 எஸ்யூவி முதல் லாட் விற்று தீர்ந்தது

விற்பனைக்கு வந்து ஒரு சில நாட்களிலேயே ஆடி க்யூ3 எஸ்யூவியின் 500 கார்கள் கொண்ட முதல் லாட் விற்று தீர்ந்துவிட்டது.

க்யூ வரிசையில் கிராஸ்ஓவர் ரகத்தில் க்யூ3 என்ற புதிய எஸ்யூவியை கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வந்தது ஆடி. குறைந்த விலை, ஏராளமான சொகுசு வசதிகள் என இளைய தலைமுறையினரை கவரும் அம்சங்களுடன் வந்தது க்யூ3.

Audi Q3

முதல் லாட்டில் 500 க்யூ3 எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஆடி. இதனால், க்யூ3க்காக நீண்ட நாட்களாக காத்திருந்த வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு புக்கிங் செய்தனர்.

இதனால், அறிமுகம் செய்யப்பட்டு 5 நாட்களிலேயே முதல் லாட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதாக ஆடி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்," க்யூ3க்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களை நெகிழ வைத்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்கு க்யூ3 கார் கிடைக்காது. அடுத்ததாக இரண்டாவது லாட்டில் 500 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் முதல் இரண்டாவது லாட் க்யூ3 கிடைக்கும்," என்றார்.

2.0 லிட்டர் டீசல் க்வாட்ரா டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட க்யூ3 ரூ.26.21 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, June 15, 2012, 15:12 [IST]
English summary
German luxury carmaker Audi has sold the first lot of its newly launched Q3 crossover in just 5 days. Earlier, we had reported that the carmaker has sold 400 units of the Q3 in a few days and 100 more cars are left. The response the car has got is great at a time when car sales have been affected badly due to rising fuel prices.
மேலும்... #audi #auto news #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+