வரும் நவம்பரில் எஸ்6 பிரிமியம் காரை களமிறக்குகிறது ஆடி

வரும் நவம்பரில் எஸ்6 பிரிமியம் செடான் காரை ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளில் சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடித்தே தீருவேன் என்று ஆடி கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது.

இதற்காக, அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எஸ்4, க்யூ3 கார்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் அடுத்து எஸ்6 பிரிமியம் செடான் காரை வரும் நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஆடி எஸ்6

பிற மாடல்களை விட ஸ்போர்ட்டியான வடிவமைப்பையும், பவர்ஃபுல் எஞ்சினுடன் ஏராளமான கூடுதல் அம்சங்களையும் இந்த கார் கொண்டிருக்கும். 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் அதிகபட்சம் 420 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

வெறும் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்ட இந்த கார் அதிகபட்சம் 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. இந்த வேகத்துக்கு தக்கவாறு எஞ்சின் மற்றும் தரமான கட்டமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது.

வேகத்துக்கும், எளிதான கையாளுமையை கொடுக்கும் தக்கவாறு மாறும் ஏர் சஸ்பென்ஷன், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த புகையை கொடுக்கும் வகையிலான 8 சிலிண்டர் எஞ்சின் ஆகியவை எஸ்6 காரின் கூடுதல் சிறப்பம்சங்கள்.

சிங்கிள் பிரேம் கிரில், 19 இஞ்ச் அலாய் வீல், பெரிய ஏர் ஸ்பாய்லர் உள்ளிட்டவை ஆடி எஸ்6 காரை அதிக கவர்ச்சியை கொடுக்கிறது. ரூ.60 லட்சம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2012, 10:33 [IST]
English summary
German luxury carmaker Audi continuing with its expansion plan in India, the latest news is that the company is planning to launch the Sports series S6 model by November this year.The S6 will be powered by a 4.0-liter V8 generating 420PS of power and 550Nm of torque. The car will speed to 100kmph in just 4.7 seconds before hitting an electronically limited top speed of 250kmph.
மேலும்... #audi #auto news #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+